கடந்த 2014ஆம் ஆண்டு கடற்தொழில் அமைச்சராக இருந்த ராஜித சேனாரத்ன மற்றும் மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஏப்ரல் 29ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு மோதரை மீன்பிடி துறைமுகத்தை தனியார் நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்கியதில் இடம்பெற்ற நிதிமோசடி தொடர்பாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு இன்று, மேல் நீதிமன்ற நீதிபதி முகமது மிஹால் முன்நிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் மீன்பிடி துறைமுகக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் உபாலி லியனகே உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.













