78 ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்கள் தொடர்பான ஒத்திகைகள், கொண்டாட்டங்களைக் கருத்தில் கொண்டு இன்று (30) முதல் கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, இன்று (30), நாளை (31) மற்றும் பிப்ரவரி 2 ஆகிய திகதிகளில் ஒத்திகைகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்போது சுதந்திர சதுக்கத்தைச் சுற்றியுள்ள வீதிகளில் காலை 7.45 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
பெப்ரவரி 1 ஆம் திகதி அதிகாலை 5.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரையிலும், பெப்ரவரி 4 ஆம் திகதி அதிகாலை 5.00 மணி முதல் சுதந்திர தின விழா முடியும் வரையிலும் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இந்தக் காலகட்டத்தில் கொழும்பிற்குள் வாகனப் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்காகவும், வாகன சாரதிகள் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்துவதற்காகவும் இந்த விசேட போக்குவரத்துத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
















