14 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பிலான வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட நபருக்கு 30 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கல்முனை மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது .
2020 தொடக்கம் 2021 வரை குறித்த சிறுமி 3 தடவைகள் வரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகி வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டதுடன் சிறுமி கர்ப்பமடைந்து ஆண் குழந்தை ஒன்றினையும் பிரசவித்துள்ளார்.
27 வயதுடைய குறித்த குற்றவாளி பாதிக்கப்பட்ட சிறுமியின் சகேதரியின் கணவர் என்பதுடன் அவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை என்பதுடன் ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் ரூபா 10 ஆயிரம் தண்டப்பணம் விதிக்கப்பட்டது.
அத்துடன் குறித்த தண்டப்பண தொகையை செலுத்த தவறும் பட்சத்தில் 6 மாத கால சாதாரண சிறைத் தண்டனையம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 10 இலட்சம் ரூபா நஸ்டஈடு தொகையும் வழங்கப்பட வேண்டும் எனவும் , அதனை செலுத்த தவறின் 1 மாத கால சாதாரண சிறைத்தண்டனையும் நஸ்டஈடு செலுத்தாத விடத்து 3 குற்றச்சாட்டிற்கும் தலா 10 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனையும் ஒன்றன் பின் ஒன்றாக கழிக்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது.
















