கேகாலை, ருவன்வெல்ல பொலிஸ் பிரிவில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து ஞாயிற்றுக்கிழமை மாலை (08) தல்துவ-அமிதிரிகல சாலையில் மெதகொட பகுதியில் இடம்பெற்றுள்ளது.
அமிதிரிகலவிலிருந்து தல்துவ நோக்கிச் சென்ற கார் ஒன்று, எதிர் திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியதில், கார் கவிழ்ந்தது.
காயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி, பின்னால் இருந்தவர் மற்றும் காரில் இருந்த மூன்று பயணிகள் சிகிச்சைக்காக அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
காயமடைந்தவர்களில் மூவர் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
விபத்து குறித்து ருவன்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.













