மேற்கு, சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை நேரங்களில் மூடுபனியுடன் கூடிய வானிலை எதிர்பார்க்கப்படுகிறது.
காற்று:
காற்று வடகிழக்கு திசையிலிருந்து வீசும், காற்றின் வேகம் மணிக்கு (30-40) கி.மீ. வரை இருக்கும்.
களுத்துறையிலிருந்து கொழும்பு மற்றும் புத்தளம் வழியாக மன்னார் வரையிலும், மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் கடற்கரைக்கு அப்பால் உள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு (45-50) கி.மீ. வரை அதிகரிக்கலாம்.
கடல் நிலை:
களுத்துறையிலிருந்து கொழும்பு மற்றும் புத்தளம் வழியாக மன்னார் வரையிலும், மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாக இருக்கும். தீவைச் சுற்றியுள்ள பிற கடற்பரப்புகள் மிதமானதாக இருக்கும்.













