மேற்கு லண்டனில் பதின்ம வயது சிறுவன் ஒருவன் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் மெட் பொலிஸ் (Met Police) அதிகாரிகள், 16 வயதுடைய மூன்று சிறுவர்கள் மீது குற்றம் சுமத்தியுள்ளனர்.
(Hounslow ) ஹவுன்ஸ்லோவைச் சேர்ந்த இந்தச் சிறுவர்களின் பெயர்கள், அவர்களின் வயது காரணமாக சட்டப்படி வெளியிடப்படவில்லை.
இவர்கள் மீது நேற்றுமுன்தினம் முறைப்படி குற்றம் சுமத்தப்பட்டது.
அதன்படி, ஒரு சிறுவன் மீது கொலை குற்றச்சாட்டும்,ஏனைய இருவர் மீது கடுமையான உடல் காயம் விளைவிக்க சதி செய்த குற்றச்சாட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இவர்கள் மூவரும் எதிர்வரும் செய்வ்வாய்கிழமை (17) அன்று ஓல்ட் பெய்லி (Old Bailey) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
கடந்த மாதம் 12 ஆம் திகதி மாலை 5:00 மணியளவில், (Feltham) பெல்தாமில் உள்ள விக்டோரியா சாலையில் கத்திக்குத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதில் காயமடைந்த 18 வயதான மாலிகி சர்மா (Maliki Sharma) எனும் இளைஞன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை இடம்பெற்ற நிலையிலேயே தற்போது மூன்று சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.













