வெலிகட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாவல பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 27 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ராஜகிரியவைச் சேர்ந்த குறித்த நபர், ஒரு குழுவினருடன் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்தே தாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தத் தகராறு முற்றியதன் விளைவாகவே இக்கொடிய தாக்குதல் நடத்தப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து வெலிகட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








