• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
உலகுக்கும் ஐ.நா.வுக்குமான இந்தியாவின் நிரந்தர பங்களிப்பு முக்கியமானது

உலகுக்கும் ஐ.நா.வுக்குமான இந்தியாவின் நிரந்தர பங்களிப்பு முக்கியமானது

Hanushya P by Hanushya P
2026/02/17
in இந்தியா, உலகம்
68 1
A A
0
30
SHARES
986
VIEWS
Share on FacebookShare on Twitter

உலகுக்கும் ஐ.நா.வுக்குமான இந்தியாவின் நிரந்தர பங்களிப்பு மிக மிக முக்கியமானது என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோணியோ குத்தேரஸ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு தாக்க மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வதற்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய அந்தோணியோ குத்தேரஸ், ‘‘ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி, பாதுகாப்பு, நிலையான வளர்ச்சி என அனைத்து தலைப்புகள் தொடர்பான விவாதங்களிலும் மிக முக்கியமான தலைவராக இந்தியா மாறியுள்ளது.

ஜி20 உச்சி மாநாட்டுக்கு இந்தியா தலைமை வகித்தபோது எடுக்கப்பட்ட முக்கியமான முடிவுகள் எனக்கு இன்னமும் நிலையில் உள்ளன. துரதிருஷ்டவசமாக உலகின் பல பகுதிகளில் ஜனநாயகம் சிக்கலில் உள்ள நிலையில், ஒரு ஜனநாயக நாடாகவும் மனித உரிமைகளைக் கொண்டுள்ள நாடாகவும் இந்தியா திகழ்கிறது.

ஐ.நா.வுக்கான இந்தியாவின் பங்களிப்புக்காக நாங்கள் அந்த நாட்டுக்கு மிகப் பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். குறிப்பாக, ஐ.நா. அமைதிப் படையில் இந்தியா இருப்பதற்காக நாங்கள் மிகப் பெரிய நன்றிக்கடன் பட்டுள்ளோம். தற்போது உலகின் பல பகுதிகளில் அமைதிப் பணிகளில் ஈடுபட்டு வரும் ஐ.நா. அமைதிப் படையில் 5,000 இந்திய ஆண்களும் பெண்களும் உள்ளனர்.

பாலின சமத்துவம் என்பது ஐ.நா.வின் அடிப்படை நோக்கம். அந்த நோக்கத்துக்கு இணங்க, இந்தியா முற்றிலும் பெண் காவலர்கள் அடங்கிய அமைதிப் படை ஒன்றை இந்தியா வழங்கியது. கடந்த 2007-ல் இந்த படை லைபீரியாவில் தனது பணிகளைச் சிறப்பாக செய்தது. இவ்வாறு முழு அளவில் பெண்கள் படையை அனுப்பிய முதல் நாடு இந்தியா. இது ஐ.நா. வரலாற்றில் ஒரு மைல்கல். சர்வதேச சமூகத்துக்கான ஐ.நா. நிகழ்ச்சி நிரலில் இந்தியாவின் இந்த நிரந்தர பங்களிப்பு எங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

நிச்சயமாக உலகில் கவலைப்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. உலகில் மோதல்கள் பெருகுவதையும், அநீதிகள் மற்றும் ஏற்றத்தாழ்வுகள் அதிகரிப்பதையும், பசி தீர்க்கப்படாமல் உள்ளதையும் நாம் பார்க்கிறோம். உலகின் பல பகுதிகளில் பயங்கரவாதம் வளர்ந்து வருகிறது. எனவே, கவலைப்படுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அதேநேரத்தில், சில நேர்மறையான சில மிகப் பெரிய போக்குகளும் உள்ளன.

இந்த மிக முக்கியமான மெகா போக்குகளில் ஒன்று இந்தியா போன்ற நாடுகளின் பொருளாதாரங்கள் தொடர்பானது. வளர்ந்த ஜி7 நாடுகளும் அதைப் போன்ற சில நாடுகளும், பொருளாதாரத்தில் ஒவ்வொரு நாளும் வளர்ந்து கொண்டே இருக்கின்றன. வளர்ந்து வரும் நாடுகளுக்கு அடிப்படைத் தூணாக இருக்கும் இந்தியாவும், ஒவ்வொரு நாளும் உலக பொருளாதாரத்தில் தனது பங்களிப்பை உயர்த்திக் கொண்டே இருக்கிறது. இது ஒவ்வொரு நாளும் நடக்கிறது. இது ஒரு மெகா போக்கு. காலப்போக்கில் நீதி, சமத்துவம், அமைதி ஆகியவற்றில் இந்தியா குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்க இது உதவும்.

ஐ.நா பொது அவையில் 193 உறுப்பு நாடுகள் உள்ளன. அனைத்து நாடுகளுக்கும் ஒரே மதிப்பு அங்கு அளிக்கப்படுகிறது. அதேநேரத்தில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அதன் அமைப்பிலும் செயல்பாட்டிலும் நியாயமற்று இருப்பது உண்மை. ஐ.நா. சபையை எளிதாக விமர்சிக்க இது காரணமாக இருக்கிறது.

எனினும், ஐ.நா. பெருமைப்படத்தக்க வகையில் பல்வேறு பணிகளை ஆற்றி வருகிறது. உலகம் முழுவதும் மனிதாபிமான உதவிகள், நிலையான வளர்ச்சிக்கான ஆதரவு, காலநிலை நடவடிக்கைகளுக்கான பிரச்சாரத்தை வழிநடத்துதல் ஆகியவற்றில் ஐ.நா செய்து வரும் அசாதாரணப் பணிகளை எண்ணி நான் பெருமை கொள்கிறேன்’’ என தெரிவித்தார்.

Related

Tags: #athavan #athavannews #newsupdateAntónio GuterresArtificial Intelligence ImpactIndia’s permanent contribution
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஜிந்துபிட்டி துப்பாக்கி சூடு; பொலிஸ் அதிகாரிகளுக்கு பிணை!

Next Post

மடகாஸ்கரை தாக்கிய கெசானி புயலால் 59 பேர் உயிரிழப்பு

Related Posts

தவிர்க்கக்கூடிய மருத்துவ பாதிப்புகளுக்கான இழப்பீட்டை வழங்க அழுத்தம்
இங்கிலாந்து

தவிர்க்கக்கூடிய மருத்துவ பாதிப்புகளுக்கான இழப்பீட்டை வழங்க அழுத்தம்

2026-06-26
போர் பதற்றத்தால் ஹீத்ரோவின் பயணிகள் செயற்பாடு 1.1% குறையும் என தகவல்!
இங்கிலாந்து

போர் பதற்றத்தால் ஹீத்ரோவின் பயணிகள் செயற்பாடு 1.1% குறையும் என தகவல்!

2026-06-26
ரஷ்யாவின் நிலப்பரப்புகள் மீது உக்ரேன் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல்கள்!
உலகம்

ரஷ்யாவின் நிலப்பரப்புகள் மீது உக்ரேன் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல்கள்!

2026-06-26
பயண அனுமதிப் பத்திர கட்டண விவகாரம் – பிரிட்டிஷ் ஏர்வேஸுக்கு கடும் விமர்சனம்!
இங்கிலாந்து

பயண அனுமதிப் பத்திர கட்டண விவகாரம் – பிரிட்டிஷ் ஏர்வேஸுக்கு கடும் விமர்சனம்!

2026-06-26
பக்கிங்காம் அரண்மனை புதுப்பிப்புக்கு £370 மில்லியன்!
இங்கிலாந்து

பக்கிங்காம் அரண்மனை புதுப்பிப்புக்கு £370 மில்லியன்!

2026-06-26
கிரேட்டர் மான்செஸ்டர் அருகே காட்டுத்தீ தீவிரம்! 
இங்கிலாந்து

கிரேட்டர் மான்செஸ்டர் அருகே காட்டுத்தீ தீவிரம்! 

2026-06-26
Next Post
மடகாஸ்கரை தாக்கிய கெசானி புயலால் 59 பேர் உயிரிழப்பு

மடகாஸ்கரை தாக்கிய கெசானி புயலால் 59 பேர் உயிரிழப்பு

ஒன்பது ஆசிரியர்கள் பணிநீக்கம்!

ஒன்பது ஆசிரியர்கள் பணிநீக்கம்!

வரலாற்றுச் சாதனை படைத்தார் கனேடிய வீரர் யுவ்ராஜ்

வரலாற்றுச் சாதனை படைத்தார் கனேடிய வீரர் யுவ்ராஜ்

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
போதைப்பொருள் சந்தேக நபர்களை விடுவித்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குறித்து விசாரணை!

நாடு தழுவிய ரீதியில் அதிரடி வேட்டை! தேசிய செயற்திட்டத்தின் கீழ் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் கைது!

0
சாரா ஜாஸ்மின் இறந்திருக்க வாய்ப்பில்லை: பொது பாதுகாப்பு அமைச்சர்

போதைப்பொருளுக்கு இடமில்லை – முக்கிய அறிவிப்பு

0
சுற்றுச்சூழல் பிரச்சினை? உடனே புகார் செய்ய புதிய வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்!

சுற்றுச்சூழல் பிரச்சினை? உடனே புகார் செய்ய புதிய வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்!

0
பெண் உடலியல் சிகிச்சை நிபுணர் மரண வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நேர்ந்த கதி!

பெண் உடலியல் சிகிச்சை நிபுணர் மரண வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நேர்ந்த கதி!

0
மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.