நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
அதன்படி, வடக்கு மற்றும் மேல் மாகாணங்களில் சீரான வானிலை நிலவக்கூடும்.
மேல் மாகாணத்தின் கடலோரப் பகுதிகளில், காலை வேளையில் சில இடங்களில் மழை பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுகிறது.
தென் மாகாணத்திலும், இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் சில இடங்களில், பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுகிறது.அதேநேரம், மத்திய, சபரகமுவ, மேல்இ வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை, மொனராகலை, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனியுடனான வானிலை எதிர்பார்க்கப்படுகிறது.
கடல் பிராந்தியங்களில், மழை நிலைமையானது, நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் சீரான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
காற்றானது, காங்கேசன்துறையிலிருந்து மட்டக்களப்பு ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பிராந்தியங்களில் வடகிழக்கு திசையிலிருந்து வீசும்.
நாட்டை சூழவுள்ள ஏனைய கடற்பிராந்தியங்களில் காற்றானது, வடமேல் திசையிலிருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் வீசும். காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 20-30 கிலோமீற்றர் வரை வீசக்கூடும், நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் மிதமான அளவில் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.















