ஆங்கில கால்வாய் ஊடாக பயணித்த ரஷ்ய போர் கப்பல் ஒன்றும், எண்ணெய் கப்பல் ஒன்றும் ரோயல் கடற்படையினரால் 48 மணி நேரம் பின் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் ஸ்டெரெகுஷ்சி வகை போர்க்கப்பலான ஆர்.எப்.என் சூப்ராசிடெல்னி மற்றும் எண்ணெய் கப்பலான எம்.வி அனடோலி கொலோட்கின் ஆகியவற்றைக் கண்காணிக்க ரோயல் கடற்படையின் கப்பல் ஒன்றும் ஹெலிகொப்டர் ஒன்றும் விரைந்து அனுப்பப்பட்டன.
போர்ட்ஸ்மவுத்தை தளமாகக் கொண்ட எச்.எம்.எஸ் மெர்சி கப்பலும், வைல்ட்கேட் ஹெலிகாப்டர் ஒன்றும் இந்த கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு அனுப்பட்டிருந்தது.
இந்த கண்காணிப்பு நடவடிக்கையானது நேட்டோவுடன் ஒருங்கிணைக்கப்பட்டது என்று ரோயல் கடற்படையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இரண்டு ரஷ்யக் கப்பல்களும் ஆங்கிலக் கால்வாய் வழியாக மேற்கு நோக்கிச் சென்றதாக குறிப்பிட்ட அவர் இந்த இருகப்பல்களையும் நெருக்கமாக கண்காணித்தாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், ஆங்கிலக் கால்வாயின் மேற்கு முனையில் இரு ரஷ்யக் கப்பல்களும் பிரிந்துச் சென்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட எச்எம்எஸ் மெர்சியின் கட்டளை அதிகாரி,
“நமது கடல்வழிப் பகுதிகளில் ரஷ்யக் கப்பல்களின் நடமாட்டத்தைக் கண்காணிப்பதில், மெர்சியின் தயார்நிலை மற்றும் செயல்பாட்டுத் திறனுக்கு இந்த நடவடிக்கை தெளிவான எடுத்துக்காட்டு என குறிப்பிட்டார்.














