லண்டனில் இந்த வார இறுதியில் வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்றும், இதனால் தலைநகரம் பார்சிலோனாவை விட வெப்பமாக இருக்கும் என்றும் தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டேவ் புயலால் ஏற்பட்ட கடுங்குளிர் நிலை மாறி, வெயிலும் இதமான வானிலையும் தலைநகரில் நிலவும் என கணிக்கப்பட்டுள்ளது.
நாளை புதன்கிழமை லண்டனில் வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸையும், மான்செஸ்டரில் 20 டிகிரி செல்சியஸையும் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
24 டிகிரி செல்சியஸ் வரையிலான அதிகபட்ச வெப்பநிலையானது, கடந்த மார்ச் 18 அன்று அபெரிஸ்ட்வித் அருகே உள்ள கோகர்தானில் பதிவான 20.9 டிகிரி செல்சியஸ் என்ற இந்த ஆண்டின் இதுவரையில் பதிவான வெப்ப நிலையினை விஞ்சும் என தேசிய வானிலை ஆய்வாளர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.
இதன் காரணமாக இந்த வாரம் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் 19 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை எட்டவிருக்கும் பார்சிலோனாவை விட, ஐக்கிய இராச்சியத்தின் பல பகுதிகள் அதிகரித்த வெப்ப நிலை நிலவும் என கூறப்படுகிறது.















