நிக்கவரெட்டிய, கொபேகனே பகுதியில் தெதுரு ஓயா ஆற்றில் நீராடிக் கொண்டிருந்த போது, நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் நபர்கள் குழுவிலிருந்து ஆறு பேர் உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்ப்பட்டனர்.
இரண்டு பெண்கள் மற்றும் நான்கு ஆண்களே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டவர்கள் ஆவர்.
இந்த சம்பவம் நேற்று (16) நிகழ்ந்துள்ளது.
நீரில் மூழ்கிய இருவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சம்பவத்தில் மீட்கப்பட்ட ஏனைய இருவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.














