புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் என் ஆர் காங்கிரஸ் 17 தொகுதிகளிலும், காங்கிரஸ் ஆறு தொகுதிகளிலும், மற்றவை நான்கு தொகுதிகளிலும், தமிழக வெற்றிக்கழகம் மூன்று தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.
திருவாடானை தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ராஜு 2000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.
திருமயம் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ரகுபதி 1, 490 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.
பாளையங்கோட்டை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் அப்துல் வஹாப் 18, 805 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.
ஆலங்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் மெய்யநாதன் 12, 905 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.
சென்னை எழும்பூர் தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ராஜ்மோகன் 10, 804 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளின் அடிப்படையில்.. ஒரு கோடியே 40 லட்சம் வாக்குகளை தமிழக வெற்றிக்கழகம் பெற்றிருக்கிறது. 30 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை தமிழக வெற்றி கழகம் பெற்றிருக்கிறது.
வேதாரண்யம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஓ எஸ் மணியன் 7, 331 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.
நத்தம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட நத்தம் விஸ்வநாதன் 11, 009 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.
திருத்துறைப்பூண்டி தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரான மாரிமுத்து- சுமார் 12 ஆம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.














