சர்வதேச கிரிக்கட்பேரவை வெளியிட்டுள்ள டெஸ்ட் சம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலில் இந்திய அணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது
புதிய தரவரிசையின் படி இந்திய அணி 06 ஆம் இடத்தைப் பிடித்துள்ளது
சில்ஹெட் (Sylhet) நகரில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பங்களாதேஷ் அணி டெஸ்ட் சாம்பியன் தரவரிசையில் 5 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான 02 போட்டிகள் கொண்ட தொடரை பங்களாதேஷ் முழுமையாகக் கைப்பற்றியதால் அந்த அணி அதிக புள்ளிகளைப் பெற்று தரவரிசையில் 5 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

















