அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றையதினம் மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்றையதினம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ள மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 354.03 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்துடன், அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 342.63 ரூபாவாக பதிவாகியுள்ளது. தொடர்ச்சியாக டொலரின் மதிப்பு அதிகரித்து வருவதால், இலங்கை ரூபா மேலும் பலவீனமடைந்து வருவதாக மத்திய வங்கியின் தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளன.
கடந்த 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 02ஆம் திகதிக்குப் பின்னர் அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாய் பதிவு செய்த மிகக் குறைந்த மதிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் உள்நாட்டிலுள்ள வங்கிகளின் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதிகளும் இன்று வெளியிடப்பட்டுள்ளன.















