மர்மமான முறையில் உயிரிழந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான விசாரணைகள் இன்று கொழும்பு கோட்டை நிதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றிருந்தது.
கொழும்பு கோட்டை நீதவான் பாசன் அமரசேன முன்னிலையில் இன்று சாட்சியங்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன. நான்கு சாட்சிகளிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில் மேலதிக சாட்சியங்களின் வாக்குமூலங்கள் எதிர்வரும் 26ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதுவரையில் 14 பேரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளது.
முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா வீட்டிலுள்ள சிசிரிவி காட்சிகள் பதிவாகவில்லை என தெரிவித்த நிலையில் கபில சந்திரசேன வீட்டிலுள்ள சிசிரிவி காட்சிகளின் தரவுகளும் பதிவாகவில்லை என தெரிவித்துள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
விசாரணையில் மேலும் பல குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன, அதாவது கபிலவை பிணையில் எடுக்க அரவிந்த டி சில்வாவினால் ஏற்பாடு செய்யபட்டவர்கள் முதல் நாள் வீட்டில் இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்களிடம் இதுவரையில் வாக்குமூலம் பெறப்படவில்லை என்றும் விசாரணைகளின் அடிப்படையில் கபலி உயிரிழந்த அன்று மதியம் 1 மணியளவில் வீட்டு பணியாளர் அவரை வீட்டில் பார்த்திருந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிணையில் எடுக்க அரவிந்த டி சில்வாவினால் ஏற்பாடு செய்யப்பட்ட நான்கைந்து பேர் வந்ததாக அனுஸ்கா டி சில்வா தெரிவித்திருந்திருந்த நிலையில், அதில் ஒருவர் அரவிந்த டி சில்வா மற்றும் கபிலவுடன் இரவு உணவு மேசையில் இருந்ததாகவும் மற்றவர்கள் சென்று விட்டதாகவும் பணியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக பகல் அணிந்திருந்த ஆடையுடனே கபில இரவும் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.












