கண்டி வித்யார்த்த கல்லூரியின் மாணவர் நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு ஜனாதிபதி செயலகத்தின் பழைய நாடாளுமன்ற சபா மண்டபத்தில் இன்று (04) முற்பகல் நடைபெற்றது.

ஜனாதிபதி அலுவலகம், கல்வி அமைச்சு மற்றும் இலங்கை நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் பிரிவு ஆகியன இணைந்து பாடசாலை மாணவர்களுக்காக நடைமுறைப்படுத்தும் ‘‘Vision’ நிகழ்ச்சித் தொடருக்கு இணையாக, வித்யார்த்த கல்லூரிக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதன்போது எதிர்கால தலைமைத்துவம், நாடாளுமன்ற பாரம்பரியத்தின் வரலாறு மற்றும் தற்போதைய நாடாளுமன்றத்தின் வகிபாகம் ஆகியன குறித்து மாணவர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.
மாணவர் நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சபாநாயகர் நியமனம், சபாநாயகர் பதவிப்பிரமாணம் செய்தல் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம் செய்தல் ஆகியனவும் இடம்பெற்றன.
மாணவர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பங்கேற்பிற்கான சான்றிதழ்களும் இந்நிகழ்வைக் குறிக்கும் வகையில் பாடசாலைக்கு மரக்கன்றும் வழங்கப்பட்டன.
இலங்கை நாடாளுமன்றத்தின் பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே , ஜனாதிபதியின் ஊடக ஆலோசகரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான சந்தன சூரியபண்டார உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.













