சவுத்தாம்ப்டன், ரோஸ் பவுல் மைதானத்தில் இலங்கை மகளிர் அணி உலகக் கிண்ணத்தில் முதல் முறையாக நியூசிலாந்தை வீழ்த்தியது.
செவ்வாய்க்கிழமை நடந்த 2026 ஐசிசி மகளிர் டி20 உலகக் கிண்ணத்தின் ஏழாவது போட்டியில் 151 ஓட்டங்களை துரத்திய இலங்கை, பரபரப்பான இறுதிக்கட்டத்தில் நிதானமாக விளையாடியது.
54 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்த நிலாக்ஷிகா சில்வா, 24 ஓட்டங்கள் எடுத்த கௌஷானி நுத்யங்கனாவுடன் இணைந்து 48 ஓட்டங்கள் இணைப்பாட்டத்தை அமைத்து, இரண்டு பந்துகள் மீதமிருந்த நிலையில் ஆசிய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
இத்தொடரில் இலங்கையின் முதல் வெற்றியான இது, பட்டத்தைத் தக்கவைக்கும் முயற்சி சிதைந்து வரும் நியூசிலாந்துக்கு மற்றுமொரு கடுமையான அடியைக் கொடுத்தது.
போடியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாட்டம் செய்ய முடிவு செய்த நியூசிலாந்து அணி 150/6 ஓட்டங்களை எடுத்தது.
தொடக்க ஓவரிலேயே இசபெல்லா கேஸ் 4 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தபோது, அவர்களின் இன்னிங்ஸ் ஆரம்பத்திலேயே பின்னடைவைச் சந்தித்தது.
பின்னர், ஜோர்ஜியா பிளிம்மர் (18) மற்றும் அணித் தலைவவி அமெலியா கெர் ஆகியோர் இணைந்து 49 ஓட்டங்கள் இணைப்பாட்டத்தை அமைத்து அணியை மீட்டனர்.
ஆனால் பின்னர் பிளிம்மர் ஆட்டமிழந்தார்.
கெர் தொடர்ந்து முன்னிலை வகித்து 45 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில், 13 ஆவது ஓவரில் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
சோஃபி டிவைன் பதிலடி கொடுக்கத் தொடங்கியபோது, நியூசிலாந்து ஒரு பெரிய ஓட்ட எண்ணிக்கையை எட்டும் எனத் தோன்றியது, ஆனால் இலங்கை பந்துவீச்சாளர்கள் தொடர்ச்சியான அழுத்தத்தைக் கொடுத்தனர்.
டிவைன் சிறப்பாக விளையாடி இன்னிங்ஸின் பிற்பகுதியில் 45 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
அதே நேரத்தில் மேடி கிரீன் 18 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதன்மூலம் நியூஸிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 150/6 என்ற ஓட்ட எண்ணிக்கையுடன் ஆட்டத்தை நிறைவு செய்தது.
இலங்கையின் பந்துவீச்சு கட்டுக்கோப்பாக இருந்தது, ஆறு பந்துவீச்சாளர்களில் ஐந்து பேர் விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
கவிஷா தில்ஹாரி தனது நான்கு ஓவர்களில் 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தி தனித்துத் தெரிந்தார்.
இதன் மூலம் இலங்கை அணி, நியூசிலாந்தின் ஆட்டத்தாளத்தை சீராக உடைத்து, அவர்கள் மேலும் ஓட்டங்கள் எடுப்பதைத் தடுத்தது.
நடப்பு சாம்பியன்களை 150/6 என்ற ஓட்ட எண்ணிக்கையை கட்டுப்படுத்தி, பின்னர் நிலாக்ஷிகா சில்வாவின் ஆட்டமிழக்காத 54 ஓட்டங்களின் உதவியால் ஒரு பரபரப்பான சேஸிங்கை வெற்றிகரமாக இலங்கை முடித்தது.
இதனால், இலங்கை அணி தங்களின் உலகக் கிண்ணப் பயணத்திற்கு மிகவும் முக்கியமானதாக அமையக்கூடிய ஒரு வெற்றியை கொண்டாடியது.















