மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
ஊவா மாகாணம் மற்றும் முல்லைத்தீவு, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படும் தற்காலிகமான பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
காற்று:
காற்று தென்மேற்கு திசையிலிருந்து வீசும்,காற்றின் வேகம் மணிக்கு 30-40 கி.மீ. ஆக இருக்கும்.
காங்கேசன்துறை முதல் மன்னார் ஊடாக கற்பிட்டி வரையிலும், காலி முதல் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50-60 கி.மீ. வரை அதிகரிக்கக்கூடும்.
திருகோணமலை முதல் முல்லைத்தீவு ஊடாக காங்கேசன்துறை வரையிலும், கற்பிட்டி முதல் கொழும்பு ஊடாக காலி வரையிலும் உள்ள கடற்பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50 கி.மீ. வரை அதிகரிக்கக்கூடும்.
கடல் நிலை:
காங்கேசன்துறை முதல் மன்னார் ஊடாக கற்பிட்டி வரையிலும், காலி முதல் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும். திருகோணமலை முதல் முல்லைத்தீவு ஊடாக காங்கேசன்துறை வரையிலும், கற்பிட்டி முதல் கொழும்பு ஊடாக காலி வரையிலும் உள்ள கடற்பகுதிகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படலாம்.













