தம்புத்தேகம பகுதியில் வீடொன்றிலிருந்து சந்தேகத்திற்கிடமான முறையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
தம்புத்தேகம, யாய 5 பகுதியில் உள்ள வீடு ஒன்றிலேயே நபர் ஒருவர் இவ்வாறு சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக தம்புத்தேகம பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
யாய 05, ராஜாங்கனை பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பிரேதப் பரிசோதனைக்காக சடலம் அநுராதபுரம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் தம்புத்தேகம பொலிஸார் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.














