கேகாலை மாவட்டம் மொலகொட பகுதியில், தனியார் பேருந்து ஒன்று பல வாகனங்கள் மீது மோதியதில் ஏற்பட்ட வீதி விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்Molagodaதுள்ளார்.
விபத்தில் காயமடைந்த குறைந்தது 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 7 வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் சிக்கிய வாகனங்களில் பல, ஓட்டுநர் பயிற்சி நிலையத்தை சேர்ந்தவை என்றும், மோதல் நடந்தபோது அவை அப்பகுதியில் சென்று கொண்டிருந்தன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்துக்கான காரணம் குறித்துக் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.















