தெல்தெனியவில் கார் ஒன்றிற்குள் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட பிசியோதெரபிஸ்ட் (physiotherapist) கொலை தொடர்பாக, குண்டசாலை பொலிஸ் பயிற்சிப் பாடசாலையின் பொறுப்பதிகாரி நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றச் செயலுக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் அந்தப் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அவர் வலன மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
முக்கிய சந்தேகநபர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் கைது செய்யப்படுவதிலிருந்து தப்பிக்கவும், தலைமறைவாக இருக்கவும் அந்த அதிகாரி உதவியதாகக் கருதப்படும் சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், ஏற்கனவே கைது செய்யப்பட்ட முக்கிய சந்தேகநபர், அவரது மனைவி மற்றும் மற்றொரு சந்தேகநபர் ஆகியோரை 48 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணை நடத்த நுவரெலியா நீதிவான் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
ஜூன் 17 அன்று தெல்தெனிய மருத்துவமனைக்கு அருகில் ஒரு வாகனத்திற்குள் பெண் பிசியோதெரபிஸ்ட்டின் (physiotherapist) சடலம் கண்டெடுக்கப்பட்டது.
கழுத்து நெரிக்கப்பட்டதே மரணத்திற்குக் காரணம் என்று பிரேதப் பரிசோதனையில் தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்த விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.














