புதிய பாதுகாப்பு முதலீட்டுத் திட்டத்திற்கு (DIP) எவ்வாறு நிதியளிப்பது என்பது குறித்து ஒயிட்ஹால் (Whitehall) அரச அதிகாரிகளிடையே இந்த வாரமும் கடுமையான பேச்சுவார்த்தைகள் நீடித்து வருகின்றன.
ஜூலை 7 ஆம் தேதி துருக்கியில் நடைபெறவுள்ள நேட்டோ (NATO) உச்சிமாநாட்டிற்கு முன்னதாக இத்திட்டத்தை வெளியிட அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
இதேவேளை, இத்திட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதி போதுமானதாக இல்லை எனக் கூறி, பாதுகாப்புச் செயலாளர் ஜான் ஹீலி (John Healey) மற்றும் ஆயுதப் படைகளுக்கான அமைச்சர் அல் கார்ன்ஸ் (Al Carns) ஆகிய இருவரும் இந்த மாத தொடக்கத்தில் தமது பதவிகளை ராஜினாமா செய்திருந்தனர்.
இதில் அல் கார்ன்ஸ், தொழிற்கட்சியின் தலைமைப் பதவிக்காக ஆண்டி பர்ன்ஹாமிற்கு எதிராகப் போட்டியிட வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் நிலையில், பிரிட்டனின் ராணுவப் பாதுகாப்பு விவகாரம் அந்நாட்டின் அரசியல் அரங்கில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.














