கிளிநொச்சி பகுதியில் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு விளைவிக்கும் வகையில், அதிவேகமாகப் பயணிக்கும் மோட்டார் சைக்கிள்களை கட்டுப்படுத்தும் நோக்கில் போக்குவரத்து பொலிஸாரின் விசேட அதிரடி வீதி சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
வீதி விபத்துக்களை தடுப்பதையும், பாதசாரிகள் மற்றும் ஏனைய வாகன சாரதிகளின் பாதுகாப்பை உறுதி படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு நேற்றும் இன்றும் குறித ஜூன் மாதத்தில் மட்டும் அதிரடி சோதனையின் போது, பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட சுமார் 30 க்கும் அதிகமான அதிவேக சொகுசு மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இலக்கத் தகடுகள் இன்மை: வீதியில் செல்லும் பயணிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில், முறையான சட்டப்பூர்வ ஆவணங்கள் இன்றிச் செலுத்தப்பட்டமை சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாதமை பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் போக்குவரத்து விதிகளுக்கு முரணாகவும் செயற்படும் வாகன சாரதிகளுக்கு எதிராக இனிவரும் நாட்களிலும் இத்தகைய கடுமையான சட்ட நடவடிக்கைகள் தொடரும் என கிளிநொச்சி போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேபோல் உரிய ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட சுமார் 20 க்கும் அதிகமான டிப்பர் வாகனங்கள் டிப்பர்கள் பறிமுதல் செய்து சட்ட நடவடிக்கைகள் எடுக்கபடவுள்ளது என கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.













