இலங்கை பெட்ரோலியக்கூட்டுத்தாபனம் நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலைகளை குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டிருந்த நிலையில் ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் விலை 20 ரூபாவினாலும் டீசல் லீற்றர் ஒன்றின் விலையினை 25 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலை திருத்தத்திற்கு இணையாக, லங்கா ஐஓசி மற்றும் சினோபெக் ஆகிய நிறுவனங்கள் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொண்டுள்ளன.
நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலைகளை குறைப்பதற்கு இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தினால் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது
இதன்படி, ஒரு லிட்டர் ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலையாக 414 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது
அத்துடன் ஒரு லிட்டர் லங்கா வெள்ளை டீசலின் விலை 25 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலையாக 382 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.
எவ்வாறாயினும் ஒக்டேன் 95 ரக பெட்ரோல், சுப்பர் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகளில் திருத்தம்; மேற்கொள்ளப்படவில்லை
இதனிடையே இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலை திருத்தத்திற்கு இணையாக, லங்கா ஐஓசி மற்றும் சினோபெக் ஆகிய நிறுவனங்கள் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொண்டுள்ளன.
இதன்படி, குறித்த நிறுவனங்கள் ஒரு லீட்டர் ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் விலையை 20 ரூபாவினாலும் , ஒரு லிட்டர் ஒட்டோ டீசலின் விலையை 25 ரூபாவினாலும் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளன.
இதேவேளை நேற்று நள்ளிரவு முதல் ஒக்டேன் 92 ரக பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இவ்வாறான நிலைமையினை அவதானிக்க முடிந்தது
















