கால்நடைத் தீவனத்திற்காக நெல் மற்றும் அரிசியைப் பயன்படுத்துவதைத் தடைசெய்த அரசிதழ் ரத்து செய்யப்பட்டது.
கால்நடைத் தீவன உற்பத்திக்காக நெல் அல்லது அரிசியைப் பயன்படுத்துவதைத் தடைசெய்து முன்னர் வெளியிடப்பட்ட அரசிதழ் அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார ஆணையம் தற்போது இதுகுறித்து ஒரு சிறப்பு அரசிதழ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, கால்நடைத் தீவன உற்பத்தியில் நேரடியாகப் பயன்படுத்துவதற்காகவோ அல்லது கால்நடைத் தீவன உற்பத்திக்கான உள்ளீடாகப் பயன்படுத்துவதற்காகவோ அரிசி அல்லது நெல்லை விற்பனை செய்தல், விற்பனைக்கு வழங்குதல், பதுக்கி வைத்தல், சேமித்தல், கொண்டு செல்லுதல், விநியோகித்தல் அல்லது வாங்குதல் ஆகியவை மீண்டும் அனுமதிக்கப்படும்.
இந்த உத்தரவு ஜூன் 24ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் என்றும் நுகர்வோர் விவகார ஆணையம் தெரிவித்துள்ளது.












