ஏர்பஸ் (Airbus) ஒப்பந்தம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா நியோமாலி விஜேநாயக்கவுக்கு எதிராகத் திறந்த பிடியாணை பிறப்பிக்குமாறு கொழும்பு கோட்டை நீதிவான் பாசன் அமரசேன இன்று (15) உத்தரவிட்டார்.
விசாரணையின் போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) அதிகாரி ஒருவர் முன்வைத்த கருத்துகளின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இவ்வழக்கு ஜூலை 22 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இவ்வழக்கின் முதல் சந்தேகநபரான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன ஏற்கனவே காலமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.













