இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த உமா குமரன் பிரித்தானிய வெளியுறவு, பொதுநலவாயம் மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தின் நாடாளுமன்றத் துணைச் செயலாளராகவும், அரசாங்கத்தின் உதவிக் கொறடாவாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் 2024 ஜூலையில் ஸ்ட்ராட்ஃபோர்ட் மற்றும் போ (Stratford and Bow) தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவரது நியமனம் ஈழத் தமிழர்களுக்கும், உலகம் முழுவதும் உள்ள சுமார் 8.5 கோடி தமிழர்களுக்கும் ஒரு பெருமைக்குரிய மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாகும்.















