தொழிலாளர் துறையின் கணினி அமைப்பில் 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் அத்தியாவசியப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என தொழிலாளர் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ள அத்துறை, இதன் காரணமாக, தலைமை அலுவலகம் மற்றும் அனைத்து மண்டல, மாவட்ட, துணைத் தொழிலாளர் அலுவலகங்களில் உள்ள ஊழியர் சேமநிதி தரவு அமைப்பு (Employee Provident Fund Data System) மற்றும் டிஜிட்டல் இபிஎஃப் அமைப்பு (Digital EPF System) தொடர்பான பொதுச் சேவைகள் இந்த இரண்டு நாட்களிலும் செயல்படாது என்று கூறியுள்ளது.
அதன்படி, இந்த இரண்டு நாட்களில் உதவித்தொகை வழங்குதல் மற்றும் பதிவுகள் உள்ளிட்ட பொதுச் சேவைகள் மேற்கொள்ளப்படாது என்பதால், அந்த நாட்களில் சேவைகளைப் பெறுவதற்காக முன்பே முன்பதிவு செய்தவர்கள், ஒரு மாதத்திற்குள் ஏதேனும் ஒரு அலுவலக நாளில் சம்பந்தப்பட்ட தொழிலாளர் அலுவலகத்திற்கு வரலாம் என தொழிலாளர் துறை தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.














