உச்ச நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றம் உள்ளிட்ட நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பதற்கான முன்மொழியப்பட்ட அரசியலமைப்புத் திருத்தத்தை முன்னெடுத்துச் செல்ல தயக்கம் காட்டி வந்த இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், ஒரு கோரிக்கையை விடுத்துள்ளது.
இன்று (29) நடைபெற்ற தங்களது சிறப்புப் பொதுக் கூட்டம் தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர்கள் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர்.
அக்கூட்டத்தில், நீதிபதிகளின் வயது நீட்டிப்பு தொடர்பாக 07 அம்சங்கள் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டன.













