வத்தளை, பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பள்ளியாவத்தை பகுதியில் கடந்த ஜூலை 23 அன்று இடம்பெற்ற விருந்து நிகழ்வொன்றின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேல் மாகாண வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் நேற்று (29) மாலை முகலங்கமுவ பகுதியில் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் பயன்படுத்திய வாடகை காரைப் பெறுவதற்காக, தனது வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை மாற்றிக் கொடுத்து இக்குற்றச் செயலுக்குச் சந்தேகநபர் உதவியதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் சீதுவ, முகலங்கமுவ பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் ஆவார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவு மேற்கொண்டு வருகிறது.













