ரத்மலானாவில் உள்ள கந்தாவல வீதிப் பகுதியில் இன்று துப்பாக்கிச் சூடோன்று பதிவாகிய நிலையில் சம்பவத்தில் காயமடைந்த நபர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் ரத்மலான பகுதியைச் சேர்ந்த 57 வயதுடையவர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டுத் தப்பிச் சென்ற நிலையில், அவர்களைக் கைது செய்வதற்கான விசாரணையை பொலிஸார் தொடங்கியுள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் முச்சக்கர வண்டியில் சென்ற நபரைக் குறிவைத்து இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.














