• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மேய்ச்சல் தரைப்பிரச்சினைக்கு தீர்வு இல்லையெனில் தொடர் போராட்டம்

மேய்ச்சல் தரைப்பிரச்சினைக்கு தீர்வு இல்லையெனில் தொடர் போராட்டம்

Hanushya P by Hanushya P
2026/09/15
in இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

மயிலத்தமடு, மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் தமது மேய்ச்சல் தரை உரிமையினை வலியுறுத்தி சித்தாண்டி பிரதான வீதியில் முன்னெடுத்துவரும் போராட்டத்தின் மூன்றாவது ஆண்டு நிறைவினையொட்டி இன்றைய தினம் சித்தாண்டியில் மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சித்தாண்டி சந்திக்கு அருகில் முகாமிட்டு மயிலத்தமடுஇமாதவனை கால்நடை பண்ணையாளர்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர்.
மயிலத்தமடுஇமாதவனை பகுதியில் சட்ட விரோத பயிர்ச்செய்கையாளர்கள் தொடர்ச்சியாக முன்னெடுத்துவரும் அத்துமீறிய செயற்பாடுகள் இதுவரையில் தடுத்து நிறுத்தப்படாத நிலையில் மேய்ச்சல் தரை காணிகள் இல்லாமல்போகும் நிலையில் கால்நடைகள் மீதும் தொடர்ச்சியாக தாக்குதல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் இந்த நீதிகோரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு மூன்று ஆண்டை பூர்த்துசெய்துள்ள 1095 நாளையொட்டி இந்த கவன ஈர்ப்பு போராட்டம் பண்ணையாளர்களினால் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது மகாவலியே வெளியேறு, எமது நிலம் எமக்கு வேண்டும், கால்நடைகளின் நிலத்தை அபகரிக்காதே, கால்நடைகளின் மேய்ச்சல் நிலஅபகரிப்பினை தடுத்து நிறுத்து, தமிழருக்கு ஒரு சட்டம், சிங்களவருக்கு ஒரு சட்டமா?சட்டத்தினை சமமாக அமுல்படுத்து, ஜனாதிபதியின் வாக்குறுதியை நிறைவேற்றாதது ஏன், மகாவலியே மௌனம் காப்பது ஏன்?போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது
.
இதன்போது கால்நடை பண்ணையாளர்கள் தமது துயரங்களை வெளிப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட தமது வாடிகளை அத்துமீறிய குடியேற்றவாசிகள் எரித்து மேற்கொள்ளும் அடாவடித்தனங்களை குறிக்கும்வ கையில் அமைக்கப்பட்ட குடிசையொன்றை எரித்து போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

அதேபோன்று தமது போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு மூன்று வருடங்களை குறிக்கும் 1095 நாளைக்குறிக்கும் வகையில் அமைக்கப்பட்ட தீப்பந்ததினை எரித்து போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் ஒரு பண்ணையாளர் பாலை தலையில் ஊற்றி போராட்டத்தினை முன்னெடுத்தார்.
இதன்போது மயிலத்தமடு மற்றும் மாதவனை பண்ணையாளர்களின் அறவழிப் போராட்டம் மூன்று ஆண்டுகளைக் கடந்து, 4ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையிலும் தங்களுக்கான நிரந்தரத் தீர்வு இன்னும் கிடைக்கவில்லை என பண்ணையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கடந்த மே மாதம் ஜனாதிபதி அவர்கள் மட்டக்களப்பிற்கு வருகை தந்தபோது அளித்த வாக்குறுதிகள் மற்றும் உத்தரவுகள் இன்னும் அதிகாரிகளால் நடைமுறைப்படுத்தப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 12ஆம் மற்றும் 13ஆம் திகதிகளில் மேய்ச்சல் நிலங்கள் சட்டவிரோதமாக உழவு செய்யப்பட்டுள்ளன. இதனால் கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலம் இல்லாது போயுள்ள தோடு,  உணவின்றி மாடுகள் இறக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

பண்ணையாளர்களின் வாடிகளுக்குள் சட்டவிரோதத் துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதாகவும்,  அண்மையில் 10க்கும் மேற்பட்ட கால்நடைகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும் பண்ணையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இது குறித்து பொலிஸில் முறையிட்டும் உரிய நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை எனக் குற்றம் சுமத்துகின்றனர்.

சட்டம் இருவேறாகப் பிரயோகிக்கப்படுகிறது: தமிழ் மக்கள் அல்லது பண்ணையாளர்கள் சிறு தவறு செய்தாலும் வனவளத் திணைக்களம் மூலம் உடனடியாகக் கைது செய்யப்படும் நிலையில் மேய்ச்சல் நிலங்களைச் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என வேதனை தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதியின் வருகைக்கு முன்னதாக இன்னும் 5 நாட்களுக்குள் சட்டவிரோத ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றி பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கத் தவறினால் தங்களது அறவழிப் போராட்டத்தைச் ‘சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டமாக’ மாற்றப்போவதாகப் பண்ணையாளர்கள் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கால்நடைகளும் வாழ்வாதாரமும் முற்றாக அழிந்துபோனால் பண்ணையாளர்கள் வீதியில் இறங்கி பிச்சை எடுக்கும் நிலைமையே உருவாகும் என்றும்இ இதற்கு அரசாங்கமும் மகாவலி அதிகார சபையுமே பொறுப்பேற்க வேண்டும் என்றும் இதன்போது வலியுறுத்தியுள்ளனர்.
இந்தபோராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், டாக்டர் இ.சிறிநாத், சிவில் சமூக செயற்பாட்டாளர்களான எஸ்.சிவயோகநாதன், அருட்தந்தை லுக்காஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த போராட்டத்தின்போது குறித்த பகுதியில் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்ததுடன் பெருமளவான புலனாய்வுத்துறையினர்களும் குவிக்கப்பட்டிருந்தனர்.

Related

Tags: draw attentionlivestock farmersMassive protestMayilathamadu and Madhavanaithird anniversary
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கை பொருளாதாரம் 4.2 சதவீதம் வளர்ச்சி

Next Post

டொன்காஸ்டரில் கோர விபத்து – இருவர் உயிரிழப்பு; நால்வர் படுகாயம்

Related Posts

இலங்கை பொருளாதாரம் 4.2 சதவீதம் வளர்ச்சி
இலங்கை

இலங்கை பொருளாதாரம் 4.2 சதவீதம் வளர்ச்சி

2026-09-15
நிந்தவூர் நெல் களஞ்சியசாலை புனரமைப்பு திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு
அம்பாறை

நிந்தவூர் நெல் களஞ்சியசாலை புனரமைப்பு திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு

2026-09-15
கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?
இலங்கை

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு அழைப்பாணை உத்தரவு

2026-09-15
2025ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் 26 சட்டங்கள் நிறைவேற்றம்!
இலங்கை

2027 ஆம் நிதியாண்டு ஒதுக்கீட்டு சட்டமூலம் நாடாளுமன்றத்திற்கு!

2026-09-15
அஸ்வெசும – 450,000 புதிய விண்ணப்பதாரர்கள்
இலங்கை

அஸ்வெசும கொடுப்பனவு செப்டம்பர் 16 முதல் வங்கிக் கணக்குகளில்!

2026-09-15
வைரலான காணொளியால் சிக்கிய பஸ் சாரதி; பொலிஸ் விசாரணை தீவிரம்!
இலங்கை

வைரலான காணொளியால் சிக்கிய பஸ் சாரதி; பொலிஸ் விசாரணை தீவிரம்!

2026-09-15
Next Post
டொன்காஸ்டரில் கோர விபத்து – இருவர் உயிரிழப்பு; நால்வர் படுகாயம்

டொன்காஸ்டரில் கோர விபத்து – இருவர் உயிரிழப்பு; நால்வர் படுகாயம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
டொன்காஸ்டரில் கோர விபத்து – இருவர் உயிரிழப்பு; நால்வர் படுகாயம்

டொன்காஸ்டரில் கோர விபத்து – இருவர் உயிரிழப்பு; நால்வர் படுகாயம்

0
மேய்ச்சல் தரைப்பிரச்சினைக்கு தீர்வு இல்லையெனில் தொடர் போராட்டம்

மேய்ச்சல் தரைப்பிரச்சினைக்கு தீர்வு இல்லையெனில் தொடர் போராட்டம்

0
இலங்கை பொருளாதாரம் 4.2 சதவீதம் வளர்ச்சி

இலங்கை பொருளாதாரம் 4.2 சதவீதம் வளர்ச்சி

0
நிந்தவூர் நெல் களஞ்சியசாலை புனரமைப்பு திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு

நிந்தவூர் நெல் களஞ்சியசாலை புனரமைப்பு திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு

0
கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு அழைப்பாணை உத்தரவு

0
டொன்காஸ்டரில் கோர விபத்து – இருவர் உயிரிழப்பு; நால்வர் படுகாயம்

டொன்காஸ்டரில் கோர விபத்து – இருவர் உயிரிழப்பு; நால்வர் படுகாயம்

2026-09-15
மேய்ச்சல் தரைப்பிரச்சினைக்கு தீர்வு இல்லையெனில் தொடர் போராட்டம்

மேய்ச்சல் தரைப்பிரச்சினைக்கு தீர்வு இல்லையெனில் தொடர் போராட்டம்

2026-09-15
இலங்கை பொருளாதாரம் 4.2 சதவீதம் வளர்ச்சி

இலங்கை பொருளாதாரம் 4.2 சதவீதம் வளர்ச்சி

2026-09-15
நிந்தவூர் நெல் களஞ்சியசாலை புனரமைப்பு திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு

நிந்தவூர் நெல் களஞ்சியசாலை புனரமைப்பு திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு

2026-09-15
கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு அழைப்பாணை உத்தரவு

2026-09-15
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.