இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையே நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விலக்கப்பட்டுள்ளார்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைக்குப் பின்னர் அவருக்கு ஏற்பட்ட இடது முழங்கால் காயத்திலிருந்து முழுமையாக குணமடைய அதிக நேரம் தேவைப்படுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் (பிசிசிஐ) பும்ராவை அவசரமாக களமிறங்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.
இருப்பினும், பும்ராவிற்கு மாற்றாக யார் என இன்னும் அறிவிக்கப்படவில்லை.
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்குப் பின்னர் பும்ரா எந்த டெஸ்ட் போட்டியிலும் விளையாடவில்லை.
ஜூலை மாதம் இங்கிலாந்து தொடருக்குப் பின்னர், பிசிசிஐ மருத்துவக் குழு வகுத்த திட்டத்தின் ஒரு பகுதியாக பும்ரா நீண்ட கால உடற்தகுதி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 15 அன்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலும், இரண்டாவது போட்டி ஆகஸ்ட் 23 அன்று கொழும்பில் உள்ள எஸ்.எஸ்.சி மைதானத்திலும் நடைபெற உள்ளது.
போட்டித்தொடர் தொடங்குவதற்கு முன்பு, இந்திய அணி ஆகஸ்ட் 7 ஆம் கொழும்பில் மூன்று நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாட உள்ளது.

















