• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நீர்மட்டம் உயர்வு; பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை! 

நீர்மட்டம் உயர்வு; பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை! 

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/08/03
in இலங்கை, முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

கடந்த 24 மணித்தியாலங்களில் பதிவான கணிசமான மழைவீழ்ச்சியால் மகாவலி, களனி மற்றும் களு ஆறுகளின் மேற்பகுதி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடும் மழையால் ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பணிப்பாளர் பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார குறிப்பிட்டார்.

மகாவலி ஆற்றின் மேற்பகுதி நீர்ப்பிடிப்பு பகுதிகளான நாவலப்பிட்டி, நானுஓயா மற்றும் வட்டவளை உள்ளிட்ட இடங்களில் 200 மில்லி மீற்றருக்கு அண்மையான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. 

இதனால் நாவலப்பிட்டி முதல் பேராதனை வரையிலான மகாவலி ஆற்றங்கரையோர மக்களை வெள்ள அபாயம் குறித்து அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருவதாகவும், திடீர் வெள்ள நிலைமை உருவாகவில்லை என்றாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். 

மேலும், தற்போது நிலவும் சூழ்நிலை டித்வா சூறாவளி காலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பின் அளவை எட்டாது எனவும் குறிப்பிட்டனர்.

களனி ஆற்றின் மேற்பகுதிகளான லக்சபான, நோர்வூட் உள்ளிட்ட பகுதிகளில் 100 முதல் 150 மில்லிமீற்றர் வரையிலான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. 

இதனால் கித்துல்கலை உள்ளிட்ட பகுதிகளில் நீர்மட்டம் உயர்ந்திருந்தாலும் தற்போது ஓரளவு குறையத் தொடங்கியுள்ளது.

எனினும் ஹன்வெல்ல மற்றும் அவிசாவளை இடைப்பட்ட தாழ்நிலப் பகுதிகளிலும், அவிசாவளை, கித்துல்கலை மற்றும் நோர்வூட் பகுதிகளிலும் வெள்ள அபாயம் நீடிப்பதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். 

ஆற்றின் கீழ்ப்பகுதிகளில் நீர்மட்டம் மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இரத்தினபுரி மேற்பகுதியில் சுமார் 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதால் அப்பகுதியில் நீர்மட்டம் எச்சரிக்கை மட்டத்தை அண்மித்துள்ளது. 

குறிப்பிடத்தக்க உயர்வு இதுவரை இல்லாவிட்டாலும் தாழ்நிலப் பகுதிகளில் நீர் தேங்கும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நில்வளா மற்றும் கின் ஆறுகள் உள்ளிட்ட ஈர வலய ஆறுகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் 50 முதல் 75 மில்லிமீற்றர் வரை மழைவீழ்ச்சி பதிவாகியுள்ள போதிலும், அவை தற்போது வெள்ள மட்டத்தை எட்டும் நிலை இல்லை என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மறுபுறம், மகா ஓயா மற்றும் அத்தனகலு ஓயா நீர்ப்பிடிப்பு பகுதிகளில் குறைந்தளவு மழைவீழ்ச்சியே பதிவாகியுள்ளதால், அந்தப் பகுதிகளில் தற்போது வெள்ள அபாயம் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related

Tags: FloodRainfallஎல்.எஸ். சூரியபண்டாரவெள்ளம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இரு ப‍ேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; 20 பேர் வைத்தியசாலையில்!

Next Post

நாட்டின் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

Related Posts

2025ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் 26 சட்டங்கள் நிறைவேற்றம்!
இலங்கை

2027 ஆம் நிதியாண்டு ஒதுக்கீட்டு சட்டமூலம் நாடாளுமன்றத்திற்கு!

2026-09-15
அஸ்வெசும – 450,000 புதிய விண்ணப்பதாரர்கள்
இலங்கை

அஸ்வெசும கொடுப்பனவு செப்டம்பர் 16 முதல் வங்கிக் கணக்குகளில்!

2026-09-15
வைரலான காணொளியால் சிக்கிய பஸ் சாரதி; பொலிஸ் விசாரணை தீவிரம்!
இலங்கை

வைரலான காணொளியால் சிக்கிய பஸ் சாரதி; பொலிஸ் விசாரணை தீவிரம்!

2026-09-15
அனுராதபுரம் பேரணி சர்ச்சை: அர்ச்சுனாவின் உரை குறித்து TID விசாரணை!
இலங்கை

அனுராதபுரம் பேரணி சர்ச்சை: அர்ச்சுனாவின் உரை குறித்து TID விசாரணை!

2026-09-15
இம்ரான் கானுக்காக ஒன்றிணைந்த அவுஸ்திரேலிய அணியின் 7 முன்னாள் தலைவர்கள்!
ஆசிரியர் தெரிவு

இம்ரான் கானுக்காக ஒன்றிணைந்த அவுஸ்திரேலிய அணியின் 7 முன்னாள் தலைவர்கள்!

2026-09-15
பலத்த மழையால் நீரில் மூழ்கிய கொழும்பின் பல வீதிகள்!
இலங்கை

பலத்த மழையால் நீரில் மூழ்கிய கொழும்பின் பல வீதிகள்!

2026-09-15
Next Post
பல மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!

நாட்டின் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

மஹர சிறைச்சாலை கலவரம்: ரூ.150 மில்லியனுக்கும் அதிக சேதம்!

மஹர சிறைச்சாலை கலவரம்: ரூ.150 மில்லியனுக்கும் அதிக சேதம்!

யோஷித, வசந்த கரன்னகொடவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

யோஷித, வசந்த கரன்னகொடவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
2025ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் 26 சட்டங்கள் நிறைவேற்றம்!

2027 நிதியாண்டு ஒதுக்கீட்டு சட்டமூலம் நாடாளுமன்றத்திற்கு!

0
இலங்கை – இங்கிலாந்து டி:20 தொடர் இன்று ஆரம்பம்!

இலங்கை – இங்கிலாந்து டி:20 தொடர் இன்று ஆரம்பம்!

0
அஸ்வெசும – 450,000 புதிய விண்ணப்பதாரர்கள்

அஸ்வெசும கொடுப்பனவு செப்டம்பர் 16 முதல் வங்கிக் கணக்குகளில்!

0
வைரலான காணொளியால் சிக்கிய பஸ் சாரதி; பொலிஸ் விசாரணை தீவிரம்!

வைரலான காணொளியால் சிக்கிய பஸ் சாரதி; பொலிஸ் விசாரணை தீவிரம்!

0
அனுராதபுரம் பேரணி சர்ச்சை: அர்ச்சுனாவின் உரை குறித்து TID விசாரணை!

அனுராதபுரம் பேரணி சர்ச்சை: அர்ச்சுனாவின் உரை குறித்து TID விசாரணை!

0
2025ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் 26 சட்டங்கள் நிறைவேற்றம்!

2027 நிதியாண்டு ஒதுக்கீட்டு சட்டமூலம் நாடாளுமன்றத்திற்கு!

2026-09-15
இலங்கை – இங்கிலாந்து டி:20 தொடர் இன்று ஆரம்பம்!

இலங்கை – இங்கிலாந்து டி:20 தொடர் இன்று ஆரம்பம்!

2026-09-15
அஸ்வெசும – 450,000 புதிய விண்ணப்பதாரர்கள்

அஸ்வெசும கொடுப்பனவு செப்டம்பர் 16 முதல் வங்கிக் கணக்குகளில்!

2026-09-15
வைரலான காணொளியால் சிக்கிய பஸ் சாரதி; பொலிஸ் விசாரணை தீவிரம்!

வைரலான காணொளியால் சிக்கிய பஸ் சாரதி; பொலிஸ் விசாரணை தீவிரம்!

2026-09-15
அனுராதபுரம் பேரணி சர்ச்சை: அர்ச்சுனாவின் உரை குறித்து TID விசாரணை!

அனுராதபுரம் பேரணி சர்ச்சை: அர்ச்சுனாவின் உரை குறித்து TID விசாரணை!

2026-09-15
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.