• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மஹர சிறை கலவரம் திட்டமிட்ட நாசவேலை என சந்தேகம் – நீதியமைச்சர் ஹர்ஷன

மஹர சிறை கலவரம் திட்டமிட்ட நாசவேலை என சந்தேகம் – நீதியமைச்சர் ஹர்ஷன

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/08/04
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற அண்மைய அமைதியின்மை சம்பவம் திட்டமிட்ட நாசவேலை மற்றும் தீவைப்பு நடவடிக்கைகளின் அறிகுறிகளைக் கொண்டுள்ளதாக நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இன்று (04) நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிட்ட அவர், இது வழக்கமான கைதிகளுக்கிடையிலான மோதல் அல்ல எனவும், சிறை நிர்வாகத்தை முடக்குவதற்கான ஒழுங்கமைக்கப்பட்ட முயற்சியாக இருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிட்டார்.

கைதிகள் சிறைச்சாலையின் சமையலறை, உணவகம், மருத்துவப் பிரிவு மற்றும் பிரதான சிறை அதிகாரியின் அலுவலகம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு திட்டமிட்டு தீ வைத்துள்ளனர்.

இதன் மூலம் அவர்களின் நோக்கம் தெளிவாகிறது. இதுபோன்ற சம்பவம் இதற்கு முன்னர் இடம்பெற்றதில்லை. மஹர சிறை நிர்வாகத்தை சீர்குலைக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட முயற்சி ஒன்று இடம்பெற்றுள்ளதாகத் தெரிகிறது.

ஆகஸ்ட் 1 ஆம் திகதி மூன்று கைதிகள் சிறை கூரையில் ஏறி எதிர்ப்பில் ஈடுபட்டனர். 15 நிமிட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, மேலும் சுமார் 1,000 கைதிகள் அவர்களுடன் இணைந்தனர்.

இதையடுத்து நிலைமை பாரிய கலவரமாக மாறியதுடன், கைதிகள் பிரதான நுழைவாயில் மீது கற்களை வீசினர். இதனால் அதிகாரிகள் கண்ணீர் புகைக்குண்டுகள் மற்றும் இறப்பர் குண்டுகளை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

அதற்குள் சிறைச்சாலையின் பல பிரிவுகள் சேதப்படுத்தப்பட்டிருந்தன.

ஆகஸ்ட் 2 ஆம் திகதி பொலிஸ் விசேட அதிரடிப்படை (STF) மற்றும் சிறை அதிகாரிகள் இணைந்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து கைதிகளை மீண்டும் அறைகளுக்கு அனுப்பினர்.

இந்தச் சம்பவத்தில் ஒரு கைதி உயிரிழந்ததுடன், மேலும் எட்டு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 

சிறை அதிகாரிகள் எவரும் உயிரிழக்கவோ காயமடையவோ இல்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன், மஹர சம்பவத்தை அண்மையில் இடம்பெற்ற நீர்கொழும்பு சிறை கலவரத்துடன் ஒப்பிட்ட அமைச்சர், நீர்கொழும்பில் கைதிகளுக்கிடையிலான மோதல் இடம்பெற்றதாகவும், ஆனால் மஹரவில் சிறை நிர்வாகத்துடன் நேரடி மோதல் ஏற்பட்டதாகவும் கூறினார்.

இவ்வளவு அதிகமான கைதிகள் ஒரே நேரத்தில் எவ்வாறு ஒருங்கிணைந்தனர் என்பது கேள்விக்குறியாக உள்ளது. 

இதற்கு வெளிப்புற தாக்கம் இருந்ததா என்பதையும் விசாரித்து வருகிறோம்.

மஹர சிறையை செயலிழக்கச் செய்வதே நோக்கமாக இருந்துள்ளது.

இது தொடர்பில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. 

சதித்திட்டத்தில் ஈடுபட்டவர்கள் இருப்பின், அவர்களுக்கு எதிராக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

மஹர சிறைச்சாலையின் நிலைமை தற்போது முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதுபோன்ற சம்பவங்கள் ஏனைய சிறைச்சாலைகளுக்கும் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related

Tags: harshana nanayakkaraJustice Ministermahara prisonநீதியமைச்சர்மஹர சிறை கலவரம்ஹர்ஷன நாணயக்கார
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

Next Post

யோஷித – கரன்னாகொட வழக்கு: கொழும்பு மேல் நீதிமன்றில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

Related Posts

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்!
இலங்கை

பேருந்து முதல் டிப்பர் வரை – சாரதிகளுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

2026-09-15
சவுதி எண்ணெய் வழித்தடம் ஆபத்தில்; உலக சந்தையில் அதிர்ச்சி அலை!
ஆசிரியர் தெரிவு

சவுதி எண்ணெய் வழித்தடம் ஆபத்தில்; உலக சந்தையில் அதிர்ச்சி அலை!

2026-09-15
விமான நிலையத்தில் கைவிடப்பட்ட 32 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்பு! 
இலங்கை

விமான நிலையத்தில் கைவிடப்பட்ட 32 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்பு! 

2026-09-15
திடீர் சுற்றிவளைப்பில் யாழ்ப்பாணத்தில் 531 பேர் கைது!
இலங்கை

களுபோவில அவிஷ்கவின் போதைப்பொருள் வலையமைப்பு நடத்துனர் கைது!

2026-09-15
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை!
இலங்கை

கூர்மையான ஆயுதங்களினால் தாக்கப்பட்ட சம்பவங்களில் இருவர் உயிரிழப்பு!

2026-09-15
நாட்டின் சில பகுதிகளில் 100 மி.மீ. மழைக்கான சாத்தியம்!
ஆசிரியர் தெரிவு

நாட்டின் சில பகுதிகளில் 100 மி.மீ. மழைக்கான சாத்தியம்!

2026-09-15
Next Post
யோஷித – கரன்னாகொட வழக்கு: கொழும்பு மேல் நீதிமன்றில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

யோஷித – கரன்னாகொட வழக்கு: கொழும்பு மேல் நீதிமன்றில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

ஆயிரம் குறைவான கைதிகள் முன்கூட்டியே விடுதலை – நீதித்துறை செயலாளர் தகவல்

ஆயிரம் குறைவான கைதிகள் முன்கூட்டியே விடுதலை – நீதித்துறை செயலாளர் தகவல்

ஜூலை மாதத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக வெளியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஜூலை மாதத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக வெளியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
நாடு திரும்பிய ருமேஷ் தரங்கவின் ஈட்டிகள் சேதம்! 

நாடு திரும்பிய ருமேஷ் தரங்கவின் ஈட்டிகள் சேதம்! 

0
பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கிய சீனா!

பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கிய சீனா!

0
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்!

பேருந்து முதல் டிப்பர் வரை – சாரதிகளுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

0
சவுதி எண்ணெய் வழித்தடம் ஆபத்தில்; உலக சந்தையில் அதிர்ச்சி அலை!

சவுதி எண்ணெய் வழித்தடம் ஆபத்தில்; உலக சந்தையில் அதிர்ச்சி அலை!

0
விமான நிலையத்தில் கைவிடப்பட்ட 32 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்பு! 

விமான நிலையத்தில் கைவிடப்பட்ட 32 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்பு! 

0
நாடு திரும்பிய ருமேஷ் தரங்கவின் ஈட்டிகள் சேதம்! 

நாடு திரும்பிய ருமேஷ் தரங்கவின் ஈட்டிகள் சேதம்! 

2026-09-15
பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கிய சீனா!

பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கிய சீனா!

2026-09-15
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்!

பேருந்து முதல் டிப்பர் வரை – சாரதிகளுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

2026-09-15
சவுதி எண்ணெய் வழித்தடம் ஆபத்தில்; உலக சந்தையில் அதிர்ச்சி அலை!

சவுதி எண்ணெய் வழித்தடம் ஆபத்தில்; உலக சந்தையில் அதிர்ச்சி அலை!

2026-09-15
விமான நிலையத்தில் கைவிடப்பட்ட 32 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்பு! 

விமான நிலையத்தில் கைவிடப்பட்ட 32 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்பு! 

2026-09-15
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.