மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
இப்பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
சப்ரகமுவ மாகாணத்தின் சில இடங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பல இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
வடமத்திய, சபரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படும் தற்காலிகமான உள்ளூர் பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
காற்று:
காற்று மேற்கு முதல் தென்மேற்கு திசையிலிருந்து வீசும். காற்றின் வேகம் மணிக்கு 30-40 கி.மீ ஆக இருக்கும்.
புத்தளம் முதல் கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடற்பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 60-70 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும்.
மட்டக்களப்பு முதல் திருகோணமலை வழியாக முல்லைத்தீவு வரையிலான கடற்பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும்.
கடலின் நிலை:
புத்தளம் முதல் கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடற்பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாகவோ அல்லது மிகவும் கொந்தளிப்பாகவோ காணப்படும்.
அடுத்த அறிவிப்பு வரும் வரை கடற்படையினரும் மீனவர்களும் இக்கடற்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மட்டக்களப்பு முதல் திருகோணமலை வழியாக முல்லைத்தீவு வரையிலான கடற்பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் மற்றும் கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கக்கூடும்.














