முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ இன்றையதினம் வாக்குமூலம் ஒன்று வழங்குவதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகிய நிலையில் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
அவர் குறித்த திணைக்களத்தில் இன்று (12) முற்பகல் சுமார் 10 மணியளவில் முன்னிலையாகினார்.
இந்நிலையில் 2 மணித்தியாலயங்களுக்கும் அதிக காலம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர், அங்கிருந்து அவர் வௌியேறியுள்ளார்.








