நாடாளுமன்றத்தின் முன்னாள் பிரதிச் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன இன்று காலை (13) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளார்.
சபாநாயகரால் வாகனங்களும் உத்தியோகப்பூர்வ இல்லங்களும் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுவது தொடர்பாக, நாடாளுமன்றத்தின் முன்னாள்பிரதிச் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன மற்றும் பிறர் அளித்த புகாரின் பேரில் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் வருகை தந்துள்ளார்.







