நடிகை த்ரிஷா கிருஷ்ணன் இன்று (15) காலை சென்னையில் உள்ள புனித ஜோர்ஜ் கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் கலந்துகொண்டார்.
இவ்விழாவின் ஒரு பகுதியாகத் தமிழ் நடிகரும் தமிழக முதல்வருமான சி.ஜோசப் விஜய் தேசியக் கொடியை ஏற்றினார்.
த்ரிஷா முதல் வரிசையில் அமர்ந்திருந்தார். இந்நிகழ்ச்சி தொடர்பான பல காணொளிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் உள்ளிட்ட பல விருந்தினர்களுடன் முன்வரிசையில் அமர்ந்திருந்த நடிகை த்ரிஷா, மிகவும் மகிழ்ச்சியான மனநிலையில் காணப்பட்டார்.
அவர் புன்னகைத்தபடியே தன்னைச் சுற்றியிருந்தவர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தார்.
இந்த நிகழ்விற்காக, எளிமையான அதே சமயம் நேர்த்தியான பாரம்பரியத் தோற்றத்தைத் த்ரிஷா தேர்ந்தெடுத்தார்.
அவர் ஒரு தங்க நிறப் புடவையை அணிந்திருந்ததுடன், மிகக் குறைந்த அளவிலான அணிகலன்களையே பயன்படுத்தினார்.
இதனால் அந்தப் பாரம்பரிய ஆடையே அவரது தோற்றத்தின் முக்கிய ஈர்ப்பாக அமைந்தது.
தனது கூந்தலில் மல்லிகைப் பூவைச் சூடி, ஒட்டுமொத்தத் தோற்றத்திற்கும் ஒரு பாரம்பரிய அழகைச் சேர்த்தார்.
விஜய் உடனான காதல் கிசுகிசுக்கள் குறித்த ஊகங்கள் நிலவி வரும் சூழலில், இந்த நிகழ்வில் திரிஷா கலந்துகொண்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.








