புங்குடுதீவு கடற்கரையில் இன்று (26) காலை சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. சடலமானது இனங்காண முடியாத அளவிற்கு உருக்குலைந்து காணப்படுகிறது.
இன்று காலை கடற்தொழிலுக்கு சென்றவர்கள் குறித்த சடலத்தை கண்டுள்ளனர். அதன்பின்னர் ஊர்காவற்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது
சடலமாக கரையொதுங்கிய குறித்த நபர் யாரென இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
குறித்த சடலத்தை மீட்டு உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.














