நீண்ட வார இறுதி விடுமுறை காரணமாக, கொட்டாவாவில் உள்ள மக்கும்புர பல்முனைப் போக்குவரத்து மையத்திற்கு ஏராளமான பயணிகள் வந்துகொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறையைக் கழிப்பதற்காக மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கும் பல்வேறு பகுதிகளுக்கும் பயணம் செய்வதால், இன்று அந்த மையத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.














