லா லிகா தொடரின் முதல் உள்ளூர் போட்டியில் புதன்கிழமை (26) அன்று சாண்டியாகோ பெர்னாபேயு (Santiago Bernabeu) மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில், கைலியன் எம்பாப்பே ஹெட்ரிக் கோல் அடித்தார்.
அவரின் இந்த அசத்தலான கோல்களுடன் ரியல் மாட்ரிட் அணி, ரியல் சொசைடாட் அணியை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
ஆட்டத்தின் 40 ஆவது நிமிடத்தில் எம்பாப்பே கோல் அடித்து மாட்ரிட் அணியை முன்னிலைப்படுத்தினார்.
நான்கு நிமிடங்கள் கழித்து எதிரணியின் லூகா சூசிக் கோல் அடித்து ஆட்டத்தைச் சமன் செய்தார்.
ஆனால், ஆட்டத்தின் 60 ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் வீரரான எம்பாப்பே மீண்டும் மாட்ரிட் அணியை முன்னிலைப்படுத்தினார்.
68 ஆவது நிமிடத்தில் சக வீரர் வினிசியஸ் ஜூனியர் மூன்றாவது கோலை அடித்தார்.
ஆட்டம் முடிய 10 நிமிடங்கள் இருந்தபோது எம்பாப்பே தனது ஹெட்ரிக் கோல்களைப் பூர்த்தி செய்தார்.

















