ராக் ஸ்டார் யாஷ் நடிப்பில் புதன்கிழமை (26) வெளியான ‘டாக்சிக்’ திரைப்படம், உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய தொடக்கத்தைப் பதிவு செய்துள்ளது.
கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவான, ‘A’ சான்றிதழ் பெற்ற இந்த அதிரடித் திரைப்படம், முதல் நாளில் உலகம் முழுவதும் சுமார் 140 கோடி இந்திய ரூபாவை வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் மூலம் ‘ஜவான்’, ‘அனிமல்’, ‘ஆதிபுருஷ்’ மற்றும் ‘பதான்’ போன்ற படங்களின் முதல் நாள் வசூல் சாதனைகளை இப்படம் முறியடித்துள்ளது.
இந்தத் தொடக்க வசூல், ஒரு இந்தியத் திரைப்படத்திற்கான உலகளாவிய அளவில் மிகப்பெரிய தொடக்க வசூல்களில் முதல் 15 இடங்களுக்குள் ‘டாக்சிக்’ படத்தையும் இடம்பெறச் செய்தது.
இந்தியாவில் சுமார் ரூ. 80-85 கோடி நிகரத் தொடக்க வசூலும், உலகளவில் சுமார் ரூ. 110 கோடி மொத்த வசூலும் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டிருந்த நிலையில், இப்படம் அந்த எதிர்பார்ப்புகளை முறியடித்தது.
அதற்கு அமைவாக ‘டாக்சிக்’ திரைப்படம் இந்தியாவில் வெளியான முதல் நாளிலேயே 100 கோடி ரூபாய் நிகர வசூல் மைல்கல்லைக் கடந்தது.
இருப்பினும், ‘துரந்தர் 2’ (ரூ. 103 கோடி), ‘கேஜிஎஃப் 2’ (ரூ. 116 கோடி), ‘பாகுபலி 2’ (ரூ. 121 கோடி), ‘ஆர்ஆர்ஆர்’ (ரூ. 133 கோடி) மற்றும் ‘புஷ்பா 2’ (ரூ. 164.25 கோடி) ஆகிய படங்களின் முதல் நாள் உள்ளூர் வசூலை விட இது குறைவாகவே உள்ளது.














