நேபாளத்தின் சில பகுதிகளைப் பேரழிவுகரமான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் தாக்கிய சில நாட்களுக்குப் பின்னர், செவ்வாய்க்கிழமை இரவு அந்நாட்டின் வடமேற்கு முஸ்டாங் மாவட்டத்தில் 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதன் அதிர்வுகள் அண்டை மாவட்டங்களிலும் உணரப்பட்டன.
தேசிய நிலநடுக்கக் கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தகவலின்படி, காத்மாண்டுவிலிருந்து வடமேற்கே சுமார் 375 கி.மீ. தொலைவில் உள்ள முஸ்தாங் பகுதியின் லோமந்தாங் என்ற இடத்தில் மையப்புள்ளியைக் கொண்ட நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி இரவு 9.53 மணிக்கு ஏற்பட்டது.
உடனடி சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் இல்லை.
மனங், டோல்பா மற்றும் மியாக்டி மாவட்டங்களிலும் அதிர்வுகள் உணரப்பட்டன.
அண்மைய நாட்களில் பெய்த பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளிலிருந்து நேபாளம் மீண்டு வருகிறது.
இச்சம்பவங்கள் நாட்டின் பல பகுதிகளில் சாலைப் போக்குவரத்தைப் பாதித்ததுடன், உயிரிழப்புகளையும் சேதங்களையும் ஏற்படுத்தின.
நில அதிர்வுகள் மற்றும் தீவிர வானிலை நிகழ்வுகள் ஆகிய இரண்டிற்கும் அதிக பாதிப்புக்குள்ளாகக்கூடிய நாடான நேபாளத்தில், ஏற்பட்டுள்ள இந்தச் அண்மைய நிலநடுக்கம் கவலையை மேலும் அதிகரித்துள்ளது.














