சவுத்தாம்ப்டனில் இன்றிரவு (15) தொடங்கவுள்ள மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில், இலங்கை அணியை இங்கிலாந்து எதிர்கொள்ளவுள்ளது.
இந்தப் போட்டியானது இலங்கை நேரப்படி இன்றிர 11.00 மணிக்கு ஆரம்பமாகும்.
இலங்கை அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம் செப்டம்பர் 15, 17 மற்றும் 19 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ள மூன்று டி20 போட்டிகளுடன் தொடங்கும்.
அதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 22 முதல் அதே எண்ணிக்கையிலான ஒருநாள் போட்டிகள் நடைபெறும்.
சவுத்தாம்ப்டன், கார்டிஃப் மற்றும் மான்செஸ்டர் ஆகிய நகரங்கள் முறையே இந்த மூன்று டி20 போட்டிகளையும் நடத்தவுள்ளன.
இத்தொடரின் முதல் இரண்டு போட்டிகளும் உள்ளூர் நேரப்படி மாலை 6:30 மணிக்கும் (இந்திய மற்றும் இலங்கை நேரப்படி இரவு 11 மணிக்கும்) தொடங்கும்.
அதேவேளையில், மூன்றாவது டி20 போட்டி உள்ளூர் நேரப்படி காலை 11 மணிக்கும் (இந்திய மற்றும் இலங்கை நேரப்படி பிற்பகல் 3:30 மணிக்கும்) தொடங்கும்.

















