முன்னாள் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் (NTC) தலைவர் ரேணுக பெரேரா, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார்.
பேருந்துகளுக்கான பாதை அனுமதிப்பத்திரங்களை சட்டவிரோதமாக வழங்கிய சம்பவம் தொடர்பிலேயே ரேணுக பெரேரா கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.













