நாடு முழுவதும் நிலவும் கடும் மழை காரணமாக, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு தொடர்பான முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
இந்த எச்சரிக்கைகள் இன்று (20) காலை 7:00 மணிக்கு வெளியிடப்பட்டன.
இவை நாளை (21) காலை 7:00 மணி வரை, அதாவது 24 மணி நேரத்திற்கு நடைமுறையில் இருக்கும்.
காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, இரத்தினபுரி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு இவ்வாறு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே, மக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.












