கிரிவுல்ல பொலிஸ் நிலையத்தின் அதிகாரிகள் குழுவினரால் பன்னல பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட ஆண் ஒருவரும் இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின்போது, பல முக்கிய தகவல்களை வெளிக்கொணர முடிந்துள்ளது.
அதற்கமைய, குறித்த சந்தேகநபர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில், 2026.09.22 ஆம் திகதி அவர் தற்காலிகமாக வசித்து வந்த ஹிரகல வத்தை, நெலும்தெனிய பிரதேசத்தில் அமைந்துள்ள வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, பின்வரும் பொருட்களை விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்:
- ஹெரோயின் 62 கிராம்
- ஹெரோயின் போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம் ஈட்டப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் ரூபாய் 1,680,000/- (16 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா) பணம்
- ஹெரோயின் விநியோகத்திற்குப் பயன்படுத்தப்படும் சாராய போத்தல்களுக்கான மூடிகள் 500
- பல்வேறு நிறங்களைக் கொண்ட 2235 பிளாஸ்டிக் குழாய்கள்
- வெளிப்படையான வெள்ளை நிறத்திலான, சுமார் 62 அடி நீளமுடைய பிளாஸ்டிக் குழாய் சுருள் ஒன்று
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.














