கொலம்பஸ் க்ரூ அணிக்கு எதிரான ஞாயிற்றுக்கிழமை (27) நடைபெற்ற MLS போட்டியில், லயோனல் மெஸ்ஸி ஒரு அற்புதமான ஃப்ரீ கிக் மூலம் இன்டர் மியாமி அணியை சமநிலைக்குக் கொண்டு வந்தார்.
அந்த ஆர்ஜென்டின வீரர், ஆட்டத்தின் 33 ஆவது நிமிடத்தில், பக்கவாட்டிலிருந்து பந்தை தூரத்திலிருந்த கோல் கம்பத்தை நோக்கி வளைத்து அடித்ததன் மூலம், கோல் காப்பாளர் பேட்ரிக் ஷுல்டேவுக்கு பெரிதாக ஒன்றும் செய்ய இயலாமல் வலைக்குள் பந்தை அனுப்பினார்.
மியாமி பின்தங்கிய பிறகு, மெஸ்ஸி வலது பக்கத்திலிருந்து ஃப்ரீ கிக்கை அடிக்க முன்வந்தார்.
சக வீரரை நாடாமல், எட்டு முறை பலோன் டி’ஓர் வென்ற அவர் நேரடியாக கோலை நோக்கி அடித்தார்.
அவரது இடது கால் உதை, தடுப்புச் சுவருக்கு மேலே வளைந்து சென்று, மேல் பின் கம்பத்திற்குள் தாழ்ந்து சென்று கோலாக மாறியதால், ஆட்டம் 1-1 என சமநிலையானது.
பெனால்டி வாய்ப்பின் மூலம் ஜோசப் மார்டினெஸ் கொலம்பஸ் அணிக்கு முன்னிலையை பெற்றுத்தந்த வெறும் எட்டு நிமிடங்களுக்குப் பிறகு அந்த கோல் அடிக்கப்பட்டது.
எவ்வாறெனினும் போட்டியின் இரண்டாம் பாதியின் மேலதிக நேரத்தின் எட்டாவது நிமிடத்தில் மாற்று வீரர் ஜமால் தியாரே கோல் அடித்து, கொலம்பஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றியை உறுதி செய்தார்.














